ராமதாஸ் காரை போதையில் வழி மறித்த வாலிபர்கள்!

விழுப்புரம் மாவட்டம் நல்லாவூர் என்ற கிராமத்தில் டாக்டர் ராமதாஸின் உறவினர் ஒருவர் மரணமடைந்து விட்டார். இதையடுத்து துக்கம் கேட்க ராமதாஸ் காரில் நல்லாவூர் சென்றார்.
அவரது கார் தைலாபுரம் தோட்ட இல்லத்திலிருந்து கிளம்பி சென்றபோது சாலையில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள், ராமதாஸின் காருடன் மோதுவது போல வந்தனர்.
அவர்கள் இருவரும் நல்ல போதையில் இருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்களை அடிக்க ராமதாஸ் காருக்கு முன்னால் சென்ற வாகனங்களில் இருந்த பாமகவினர் முயன்றனர்.
ஆனால் இருவரும் குடிபோதையில் இருப்பதால் விட்டு விடும்படி ராமதாஸ் கூறவே தொண்டர்கள் பேசாமல் இருந்தனர்.
ஆனால் குடிகார வாலிபர்கள் தொடர்ந்து ராமதாஸ் காருடன் மோதுவது போல வந்து காருக்கு முன்னால் குறுக்கிட்டு காரை நிறுத்தினர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதையடுத்து பாமகவினர் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களை விட்டு விடும்படி ராமதாஸ் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டதால், போலீஸார் இருவரையும் எச்சரித்து விட்டு விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications