தாமரை பறிக்க சென்ற சகோதரர்கள் குளத்தில் மூழ்கி பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே குளத்தில் தாமரை பறிக்கச் சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி பலியாயினர்.
சிந்துப்பட்டி அருகே திடியன் கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது.
துரைப்பாண்டி (8), அவனது தம்பி பால்பாண்டி (5) ஆகியோர் நேற்று மாலை காணாமல் போயினர். அவர்கள் ஊர் மக்கள் அனைவரும் தேடி வந்த நிலையில் இன்று காலை குளத்தில் அவர்களது உடல்கள் மிதந்தன.
இந்தக் குளத்தில் தாமரைப் பூத்துள்ள நிலையில் அதை எடுக்கப் போய் தான் இருவரும் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி பலியானதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications