மிகப்பெரிய கவலை பண வீக்கம் தான்-ப.சிதம்பரம்
வாஷிங்டன்: பண வீக்கம் தான் நாட்டின் தற்போதைய மிகப்பெரிய கவலையாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
வாஷிங்டனில் சர்வதேச நிதியம்- உலக வங்கிக் கூட்டத்தில் கலந்து கொள்ள ப.சிதம்பரம் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டி,
நாட்டின் தற்போதைய மிகப்பெரிய கவலையாக பண வீக்கம் உள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.
சில நாடுகளில் இருக்கும் பண வீக்கத்தை ஒப்பிடுகையில், இந்திய பண வீக்கத்தின் அளவு குறைவு தான். உணவு பொருட்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் தான் பண வீக்கம் அதிகரித்துள்ளது.
அதிகபட்ச பொருளாதார வளர்ச்சிக்கு ஏராளமான கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்கிறோம்.
இதன்மூலம் பண வீக்கத்தையும் சேர்த்தே இறக்குமதி செய்கிறோம்.
ஒரு நாடு அதிகபட்ச வளர்ச்சி அடைய வேண்டுமானால் மிதமான பணவீக்க அதிகரிப்பை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தற்போது பண வீக்கம் மிகவும் அதிகரித்து விட்டது.
இதனால் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியை சிறிது மட்டுப்படுத்த வேண்டிய நிலை வருமோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பதால் பெரிய பாதிப்பும் ஏதும் இல்லை. நீண்டகால நோக்கில் பார்த்தால், சில கட்டுப்பாடுகளின் கீழ் ஏற்றுமதி செய்வது பற்றி இந்திய ஏற்றுமதியாளர்கள் கற்றுக் கொள்ள முடியும். ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்கள், போட்டியை சமாளிப்பது குறித்து கற்றுக் கொண்டுள்ளார்கள். அதே போலவே இந்தியாவும் கற்றுக் கொள்ளும் என்றார் சிதம்பரம்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications