15 வயது சிறுமியை 54 வயது மாமாவுக்கு கல்யாணம் செய்ய முயற்சி!

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரியில் 15 வயது சிறுமியை, அவரது 54 வயது மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க நடந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகவள்ளி. இவர்களுக்கு சித்ரா என்கிற 15 வயது மகள் இருக்கிறார். சித்ரா, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மகள் சித்ராவை, அவரது மாமாவான 54 வது சாம்ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் காளியப்பன். இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது.

ஆனால் இந்த கல்யாணத்தில் நாகவள்ளிக்கும், சித்ராவுக்கும் உடன்பாடு இல்ைல. இதையடுத்து கல்யாணத்தைத் தடுத்த நிறுத்த முடிவு செய்த நாகவள்ளி, தனது உறவினர்களை திரட்டிக் கொண்டு வந்து காளியப்பனிடம் கல்யாணத்தை நிறுத்துமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த காளியப்பனும், மாமா சாம்ராஜும் சேர்ந்து நாகவள்ளியை அடித்து உதைத்தனர்.

இதையடுத்து நாகவள்ளி உறவினர்களுடன் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தினர். சித்ராவை மீட்டனர்.

நாகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+