துபாய் தீ விபத்து- இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற கட்டணம் ரத்து
துபாய்: துபாயில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு நகல் பாஸ்போர்ட் வழங்குவதற்கான கட்டணத்தை ரத்து செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
துபாயின் நைப் சோக் பகுதியில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறு வர்த்தகர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்டட ஆவணங்கள் தீக்கிரையாகி விட்டன.
இந்தநிலையில் இவர்களுக்கு நகல் பாஸ்போர்ட் பெறுவதற்குரிய கட்டணத்தை ரத்து செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுதொடர்பான உத்தரவை இந்திய வெளியுறவுத் துறை பிறப்பித்துள்ளது.
தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளை மே 12ம் தேதி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சேவைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
நகல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர், தீவிபத்து தொடர்பான செய்தித் தாள் விளம்பரம், காவல்துறை அறிக்கையின் நகல் ஆகியவற்றோடு விண்ணப்பித்தால் அவர்களுக்கு நகல் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications