போலி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளி சிறையில் திடீர் மரணம்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளி திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக வீடுகள் கட்டித் தருவதாக பெரும் பண மோசடியில் ஈடுபட்டதாக வேலூர் கல்வாரி மிஷனைச் சேர்ந்த போலி பிஷப் யோபு சரவணன் கைது செய்யப்பட்டார்.
யோபுவின் கூட்டாளிகள் சிலரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பாஸ்கர் என்கிற டேவிட் பாஸ்கர் (50).
இந்த நிலையில், விளாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவலு என்கிற ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ. 3 லட்சத்திற்கு புரோ நோட்டுக்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து கேசவலு போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் அவரக் கைது செய்தனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஸ்கர், நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாஸ்கர் இறந்தார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications