திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதீபா தரிசனம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருள்மிகு பத்மனாப சுவாமி கோவிலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சுவாமி தரிசனம் செய்தார்.
கேரளாவுக்கு 2 நாள் பயணமாக பிரதீபா பாட்டீல் நேற்று வந்தார். அவரை மாநில ஆளுநர் ஆர்.எல்.பாட்டியா, முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கேரள சட்டசபை பொன் விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதீபா பாட்டீல் பங்கேற்றார்.
அதந் பின்னர் கல்வியாளர் ஆர்.சங்கரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்மனாப சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவாமி சன்னதியில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் பத்மநாப சுவாமி கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விஷ்ணு அனந்தசயன கோலத்தில் காட்சி தருவது முக்கியமானது. அனந்தபத்மநாபன் என்ற பெயரும் இங்குள்ள சுவாமிக்கு உண்டு. இக்கடவுளின் பெயரைக் கொண்டுதான் திருவனந்தபுரம் என்ற பெயரும் உண்டானது.
கோவின் வரலாறு குறித்து கேட்டறிந்த பிரதீபா பாட்டீல், அங்கு நடந்து வரும் பூஜை முறைகள் குறித்தும் கேட்டுக் கொண்டார். கேரள பாரம்பரிய உடையான, கசவு சேலை காட்டி பிரதீபா கோவிலுக்கு வருகை தந்தார். சுமார் 20 நிமிடங்கள் கோவிலில் இருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications