மத்திய அரசு விழாவில் எம்எல்ஏ புறக்கணிப்பு-மதிமுக கொதிப்பு
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக மதிமுக எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் கொதித்து போயுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மத்திய விமானத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
விழா அழைப்பிதழில் அதிமுகவை சேர்ந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் மதிமுகவை சேர்ந்த திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ வீர. இளவரசன் பெயர் மட்டும் இல்லை. இதனால் அக்கட்சி நிர்வாகிகள் கொதித்து போயுள்ளனர்.
இந்த அரசு மதிமுக என்ற கட்சிக்கு மரியாதை தர வேண்டாம். அதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் வீரஇளவரசன் பெயரை அழைப்பிதழில் போட்டிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர். அழைப்பிதழும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதை பொது செயலாளர் வைகோவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவரது உத்தரவு கிடைத்தவுடன் போராடத்தில் இறங்கப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications