எல்லையில் கடும் சண்டை-பாக். தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.
நேற்று நள்ளிரவுவாக்கில் இப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றனர். இதையடுத்து 112வது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் 1000 ரவுண்டு சுட்டனர். மேலும் 16 கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதில் இந்தியத் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சிைய வெற்றிகரமாக தடுத்து விட்டனர்.
இந்த சண்டையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனரா என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் பாகிஸ்தானியப் படையினருக்குத் தெரியாமல் ஊடுறுவல் முயற்சி நடந்திருக்க முடியாது என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை ஆய்வு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஆசிஷ் மித்ரா அங்கு விரைந்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications