விடைத்தாள் நகல்: கல்வி அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம்
சென்னை: பிளஸ்டூ விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் கோரியும் விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி அலுவலகங்களில் குவிந்தனர்.
பிளஸ்டூ தேர்வெழுதிய மாணவ மாணவிகள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 7 பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வாங்கவும், அனைத்துப் பாடங்களுக்கும் மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது.
அரசு தேர்வுகள் துறையின் தலைமை அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் நேற்று முதல் விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கியது.
முதல் நாளான நேற்றே விண்ணப்பங்களை பெற மாணவ மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து உடனே சமர்பித்தனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் துறை அலுவலகத்தில் 8 கவுன்டர்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுமார் 2 மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை பெற்றனர். பெரும்பாலானோர் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.
விண்ணப்ப கட்டணத்துகான வரைவோலை எடுப்பதற்காக வங்கிகளிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications