ஹர்கிஷன் சுர்ஜீத் உடல்நிலையில் முன்னேற்றம்
டெல்லி: கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன.
92 வயதான மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெட்ரோ இதய சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரகாலமாக கோமா நிலையில் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் புருஷோத்தம் லால் கூறுகையில், சுர்ஜீத்துக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன. தானாகவே அவர் மூச்சு விடத் தொடங்கி உள்ளார்.
அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாக உள்ளன. இருப்பினும் அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்றார்.
திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து சுர்ஜீத்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், கேரள முதல்வர் அச்சுதானந்தன், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று வந்து நலம் விசாரித்தனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications