2 கணவர்கள் புகார்: 'உல்லாச' பெண் ஏட்டு சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆண்களுடன் உல்லாசமாக லீலைகளில் ஈடுபடுவதாக எழுந்த புகாரையடுத்து சென்னை பெண் போலீஸ் ஏட்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் லட்சுமி (வயது 42). இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சண்முகம் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு குமரன் என்ற மகன் இருக்கிறார். அவர் தற்போது என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு லட்சுமி மீது கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று அன்று அவருடைய கணவர் சண்முகமும், மகன் குமரனும் சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில்,

லட்சுமி பல ஆண்களோடு கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரது நடவடிக்கைகளால் எங்களுக்கு மிகவும் அவமானமாக உள்ளது. அவரை எங்களால் கண்டிக்க முடியவில்லை. போலீசில் பணிபுரிவதால் எங்களையே மிரட்டுகிறார்.

தற்போது ஆனந்தகுமார் என்ற கால் டாக்சி டிரைவருடன் தொடர்பு வைத்துள்ளார். எனவே லட்சுமியை கண்டித்து எங்களுடன் நல்லபடியாக வாழவைக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இதையடுத்து கமிஷனரின் உத்தரவுப்படி தி.நகர் போலீஸ் துணைக் கமிஷனர் லட்சுமி, புகார் செய்யப்பட்ட ஏட்டு லட்சுமியை அழைத்து கண்டித்தார். குடும்பத்தாருடன் இணக்கமாக வாழுமாறு அறிவுறுத்தினார்.

இதை ஏற்று நடப்பதாக கூறிவி்ட்டு சென்ற ஏட்டு லட்சுமி மறுநாளே யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி டிரைவர் ஆன்நதகுமாருடன் ஓடிவிட்டார். திருத்தணி்க்கு சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்தனர்.

மீண்டும் புகார்:

இந்நிலையில் லட்சுமியின் இரண்டாவது கணவர் ஆனந்தகுமார் கடந்த மே 8ம் தேதியன்று ஏட்டு லட்சுமி மீது போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,

எனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். இந் நிலையில் ஏட்டு லட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. 42 வயதான அவர், தன்னுடைய வயதை 30 என்று பொய் சொல்லி என்னை காதலித்தார். அதோடு அவருடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதாகவும் கூறினார்.

20 வயது மகனை வைத்துக் கொண்டு எல்.கே.ஜி. படிக்கும் மகன் தனக்கு இருப்பதாக லட்சுமி பொய் சொல்லிவிட்டார். அவருடைய மயக்கும் பேச்சை நம்பி அவரை திருமணம் செய்து கொண்டேன். லட்சுமியின் செல்போனை எனக்கு காதல் பரிசாக கொடுத்தார். அந்த செல்போனுக்கு ஏராளமான ஆண்கள் பேசினார்கள்.

அவர்கள் எல்லோரும் லட்சுமியின் கள்ளக் காதலர்கள் என்பது தெரியவந்தது. எம்.ஜி.ஆர்.நகரில் போலீஸ் ஏட்டாக இருக்கும் ஒருவரை லட்சுமி 12 வருடங்களாக காதலித்து அவரோடு உல்லாசமாக சுற்றித் திரிந்துள்ளார். ஆயில் மில் அதிபர் ஒருவரோடும் அவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.

என்னை ஏமாற்றி திருமணம் செய்த ஏட்டு லட்சுமி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் அவர் மேலும் பல ஆண்களை ஏமாற்றாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆனந்தகுமார் மனுவில் கூறியிருந்தார்.

மீண்டும் விசாரணை:

இந்த புகார் மனு பற்றியும் தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி மீண்டும் விசாரணை நடத்தினார். இதில் ஏட்டு லட்சுமியின் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததன. அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இதன் அடிப்படையில் லட்சுமி மீது இலாகப்பூர்வ நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து ஏட்டு லட்சுமியை காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+