பூம்புகார் பட நடிகையின் அவலம் - மகன்களே வீட்டை விட்டு துரத்தினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியாகி பெரும் பிரபலமான பூம்புகார் படத்தில் நடித்த துணை நடிகை கல்பனாவை அவரது மகன்களே வீட்டை விட்டுத் துரத்தினர். சென்னை அரசு மருத்துவமனை முன்பு பரிதாபமான நிலையில் மயங்கிக் கிடந்த அவரை போலீஸார் மீட்டனர்.

பூம்புகார் படத்தில் முக்கிய துணை வேடத்தில் நடித்தவர் கல்பனா (62). நேற்று இவர் சென்னை அரசு மருத்துவமனை முன்பு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அந்தப் பக்கம் சென்றவர்கள் யாரோ ஒரு மூதாட்டி விழுந்து கிடப்பதாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து மயக்கத்தைத் தெளிவித்து விசாரித்தபோதுதான் அவர் நடிகை கல்பனா என்பது தெரிய வந்தது.

தனது மகன்களே தன்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டதாகும், போவதற்கு வழி தெரியாமல் வந்து இங்கு மயங்கி விழுந்து விட்டதாகவும் கல்பனா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து கல்பனாவை மீட்ட போலீஸார், போரூரில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் கல்பனாவை சேர்த்தனர். மேலும் கல்பனாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+