பாக். வீரர் ஆசிப் போதைப் பொருளுடன் துபாயில் கைது

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஆசிப், கடந்த 2006ம் ஆண்டு ஸ்டிராய்ட் பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டு, கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டார். பின்னர் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்று டெல்லி அணிக்காக ஆடினார்.
ஐபிஎல் தொடரை முடித்து விட்டு மும்பையிலிருந்து துபாய் வழியாக அவர் பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். அப்போது துபாய் விமான நிலையத்தில் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பெருமளவில் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிப் கைது செய்யப்பட்டார். துபாயில் போதைப் பொருட்களுடன் யாராவது பிடிபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிப் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் இன்னும் அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications