விஜயன் கொலை: ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு நார்கோ சோதனை!
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள லதா, அவரது கணவர் ராஜேந்திரன் மற்றும் மகன் குமார் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் (நார்கோ அனாலிசிஸ்) சோதனை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி கோட்டூர்புரம் பாலம் அருகே படுகொலை செய்யப்பட்டார் விஜயன். சொத்துப் பிரச்சினை காரணமாக தனது சகோதரி லதா மற்றும் குடும்பத்தினர்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என சுதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், போலீஸாரின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள ராஜேந்திரனுக்கும், அவரது மகன் குமாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் விசாரணையைத் தொடர முடியாத நிலையில் போலீஸார் உள்ளனர்.
இதுவரை அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீஸாருக்கு தேவையான தகவல்கள், போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அவர்களை பெங்களூர் அழைத்துச் சென்று உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் முறைப்படி அனுமதி பெறவும் போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications