கோவை பஸ் கண்டக்டருக்கு சுற்றுச்சூழல் விருது
கோவை: கோவையைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கு இந்த ஆண்டுக்கான 'எக்கோ வாரியர்' என்ற சுற்றுச் சூழலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இயற்கையின்பால் அதிக ஆர்வம் கொண்டவரான கண்டக்டர் யோகநாதன் (40) கடந்த 1980லிருந்து மரங்கள் நட்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் இன்று வரை 50,000க்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவ, மாணவியரிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், சிறு துளி மற்றும் வனத்துறையிடம் மரக்கன்றுகளை வாங்கி நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவருக்கு லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல அமைப்புகள் விருது வழங்கியுள்ளன. இந் நிலையில் இப்போது துணை ஜனாதிபதியிடமிருந்தும் விருது பெற்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு, சுற்றுச்சூழலுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் போராளி (எக்கோ வாரியர்) என்ற விருதை வழங்கி வருகிறது.
உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதியன்று துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி யோகநாதனுக்கு இந்த விருதை வழங்கினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications