பள்ளிகள் அருகே செல்போன் டவர் அமைக்க தடை

இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது 19 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் நிலையும் உள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு செல்போன் கோபுரங்களை அமைத்து வருகின்றனர். இதனால் பல மாநகரங்கள் செல்போன் கோபுரங்களின் ஆக்கிரமிப்பால் திணறி வருகின்றன.
செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய தொலைத்தொடர்பு துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிக் கூடங்களுக்குஅருகிலும், பள்ளிக் கட்டடங்களிலும் செல்போன் கோபுரங்களை அமைக்க தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டுமனால் முதலில் அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், செல்போன் கோபுரங்கள் இடம் பெறும் கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து 3 மீட்டர் உயரத்தில்தான் கோபுரங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications