விமானத்தில் பறவை மோதியது-லாலு தப்பினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 77 பேர் பயணித்த தனியார் விமானத்தில் பறவை மோதியது. இதையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் இன்று காலை டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து வாரணாசிக்குப் புறப்பட்டுச் சென்றது. அதில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 77 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று மோதியது. இதையடுத்து 10.40 மணிக்கு விமானம் பாலம் விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் எந்த ஆபத்தும் நேரவில்லை. பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் லாலு பிரசாத் யாதவ் வாரணாசி புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications