அமைச்சர் காருடன் உரசிய லாரி டிரைவருக்கு அபராதம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே தமிழக அமைச்சரின் காரை உரசி சென்ற லாரி டிரைவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து முசிறிக்கு நேற்று காலை வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காரில் சென்றார். அப்போது அவரது காரை உரசியபடி அதி வேகத்தில் ஒரு லாரி சென்றது. இதில் அமைச்சரின் கார் நிலை தடுமாறி நின்றது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்று மடக்கினர்.

போலீசார் விசாரணையில் லாரி டிரைவர் பெயர் ஜெயராமன் என்றும், அந்த லாரி திருச்சியில் இருந்து சேலத்திற்கு செங்கல் ஏற்றி சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து லாரியை அளவுக்கு அதிகமான வேகத்தில் ஒட்டியதற்கும், அஜாக்கிரதையாக சென்றதற்கும் லாரி டிரைவர் ஜெயராமனுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+