அணு ஒப்பந்தம்: கருணாநிதி-சிபிஐ முக்கிய ஆலோசனை
சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதியுடன், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா தொலைபேசி மூலம் பேசினார். நாளை நேரில் வந்து கருணாநிதியை அவர் சந்திக்கிறார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான தங்களது நிலைக்கு ஆதரவாக பிற கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் இடதுசாரி கட்சிகள் இறங்கியுள்ளன.
அதன் ஒரு கட்டமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அணு சக்தி ஒப்பந்தத்தை கைவிட வேண்டியதன் அவசியம், இதில் இடதுசாரிகளின் நிலை குறித்து விளக்கினார்.
நாளை ராஜா சென்னை வருகிறார்.அப்போது முதல்வரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து விரிவாகப் பேசவுள்ளார். இத்தகவலை ராஜாவே டெல்லியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications