தாக்கரே குடும்பம் ம.பியிலிருந்து வந்தது - பவார் பத்திரிக்கை 'குண்டு'

Subscribe to Oneindia Tamil

மும்பை: வெளிமாநிலத்தவர் பிரச்சினையை பெரிதாக எழுப்பிக் கொண்டிருக்கும் தாக்கரே குடும்பத்தினரே மத்தியப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு வந்து செட்டிலானவர்கள்தான். எனவே அவர்கள் வெளிமாநிலத்தவர் பிரச்சினையை எழுப்புவதற்கு அருகதையற்றவர்கள் என்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்ளுக்கு முன்பு வடஇந்தியர்களுக்கு எதிராக கிளப்பிய புயல் இன்னும் அங்கு முழுமையாக ஓயவில்லை. ராஜ்தாக்கரேவுக்குப் போட்டியாக பால் தாக்கரேவும் வட இந்தியர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ராஷ்டிரவாதி என்ற பத்திரிக்கையில், தாக்கரே குடும்பத்தின் பூர்வீகம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பத்திரிக்கையில், பால் தாக்கரேவின் குடும்பத்தினரின் பூர்வீகம் மகாராஷ்டிரா அல்ல. மாறாக, அவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கேள். தாக்கேரவின் தந்தை புரபோந்தகர் தாக்கரே தனது குடும்பத்தினருடன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு பிழைப்பு தேடி வந்தவர்.

இதை தனது சுயசரிதையில் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதை ராஜ் தாக்கரே முதலில் நன்கு படிக்க வேண்டும்.

தாக்கரேவின் பூர்வீகமே மகாராஷ்டிரா இல்லை என்கிறபோது ராஜ் தாக்கரேவுக்கு, வட இந்தியர்கள், அந்நியர்கள், மண்ணின் மைந்தர்கள் என்கிற கோஷத்தை எழுப்புவதற்கு எந்த அருகதையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்கரே பூர்வீகம் குறித்து பவார் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள இந்த தகவல், மகாராஷ்டிர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து நாசிக்கில் உள்ள புரபோந்தகர் தாக்கரே மீடியா மையத்திற்கு நேற்று வந்த ராஜ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். மாறாக, எத்தனை செய்திகளைத்தான் நான் படிக்க முடியும் என்று கோபமாக கேட்டார்.

முன்னதாக நாசிக் ரேடியோமிர்ச்சி வானொலி நிலைய தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஊடுறுவல்காரர்களுக்கு எதிராக மராத்தியர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மராத்தி உணர்வுடன் இருக்க வேண்டும். நமது பெருமை, பாரம்பரியத்தை கட்டிக் காக்க வேண்டும்.

ரேடியோ மிர்ச்சி மராத்தி பாடல்களை ஒலிபரப்புதவில்லை. அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சூடு குறையாத பேச்சைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+