நக்சலைட் சுட்டு படகு கவிழ்ந்தது - 40 வீரர்கள் பலியானதாக அச்சம்
மல்கன்கிரி (ஒரிசா): ஒரிசா மாநிலம் மலிகுடா அருகே அணைக்கட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த படகை நோக்கி நக்சலைட்டுகள் சரமாரியாக சுட்டனர். இதில் படகு உடைந்து நீரில் மூழ்கியது. இந்த பயங்கர சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வந்த ராணுவ வீரர்கள், மலிகுடா பகுதியில் உள்ள சித்ரகொண்டா அணைக்கட்டுப் பகுதியில் படகில் பயணம் செய்தனர்.
அப்போது திடீரென நக்சலைட்டுகள் அங்கு வந்து படகை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் படகு கவிழ்ந்தது. அதில்இருந்த 40க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கிப் போய் விட்டனர்.
8 பேர் நீந்திக் கரை சேர்ந்து விட்டனர். அவர்கள் மல்கன்கிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம் தொலைதூரத்தில் இருப்பதால் உடனடியாக அங்கு போக முடியாமல் மீட்புப் படையினர் தடுமாறி வருகின்றனர்.
நக்சலைட்டுகளை வேட்டையாடிப் பிடிப்பதற்காக மேற்கு விசாகப்பட்டனத்திலிருந்து இந்த ராணுவ வீரர்கள் ஒரிசாவுக்கு வந்திருந்தனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications