கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி மகள் மரணம்
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணியின் மகள் புஷ்பா புற்று நோயால் மரணமடைந்தார். முதல்வர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணியின் மகள் புஷ்பா. இவருக்கு கணவர் ரவிக்கண்ணன், 2 மகன்கள் உள்ளனர்.
48 வயதான புஷ்பா ராயப்பேட்டை பொன்னுச்சாமி தெரிவில் வசித்து வந்தார். புஷ்பாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நோய் முற்றியது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.
நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பா மரணமடைந்தார். தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி புஷ்பாவின் வீட்டுக்கு விரைந்து சென்றார். அவரது மகன் தீபக்கிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
முதல்வர் சார்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று புஷ்பாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள மேக்கிரிமங்கலத்தில் இன்று புஷ்பாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications