இடதுசாரிகள் கடிதத்திற்கு பிரதமர் பதிலளிக்க மாட்டார்?
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் நிலையை விளக்கக் கூறி இடதுசாரிகள் அனுப்பியுள்ள கடிதத்திற்கு பிரதமரோ, மத்திய அரசோ கடிதம் அனுப்ப மாட்டார்கள் என்று தெரிகிறது.
ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் செல்வதற்கு முன்பு அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் நிலையை விளக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரியுள்ளனர். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இடதுசாரிகள் விதித்துள்ள கெடுவின்படி, இந்தக் கடிதத்திற்கு பிரதமரிடமிருந்து இன்னும் 24 மணி நேரத்திற்குள் பதில் வந்தாக வேண்டும்.
ஆனால் பிரதமரிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ இடதுசாரிகளுக்கு பதில் வராது என்றே தோன்றுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ராஜ்கன்ச் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என்ன ஆனாலும் ஒப்பந்தம் நிறைவேறும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும். அதில் எந்த மாற்றமும், தயக்கமும் இல்லை.
இதற்காக என்ன விளைவு ஏற்பட்டாலும் அதை சந்திக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸும் தயாராக உள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும். நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வராது.அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார் முன்ஷி.
முன்ஷியின் பேச்சைப் பார்க்கும்போது சமாஜ்வாடி கொடுத்துள்ள ஊக்கத்தால், இடதுசாரிகளை உதறி விட மத்திய அரசு தீர்மானித்து விட்டதாகவே தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications