சோம்நாத் பதவி விலக நெருக்கடி முற்றுகிறது - இன்று முடிவு
டெல்லி: சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பலமுனைகளிலிருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதையடுத்து மூத்த தலைவர் ஜோதிபாசுவை இன்று சந்தித்து அவர் இறுதி முடிவெடுக்கவுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோம்நாத். சம்பிரதாயப்படி, சபாநாயகர் பதவியை ஏற்பதற்கு முன்பாக அக்கட்சியிலிருந்து விலகினார்.
தற்போது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டுள்ளனர். எனவே சோம்நாத்தும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அரசியல் கட்சி சார்பில் நான்சபாநாயகர் தேர்தலில் போட்டியிடவில்லை, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். என்னை அரசியல் பிரச்சினைகளில் இழுக்க வேண்டும். ராஜினாமா செய்யும் முடிவு எதுவும் இல்லை என்று சோம்நாத் விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும் சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து நெருக்குதல் வருகிறதாம். குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் சோம்நாத் விலக வேண்டும் என சில காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கி வருகிறார்களாம்.
இதனால் குழப்பமடைந்துள்ள சோம்நாத் சாட்டர்ஜி, இன்று கொல்கத்தாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
நான் விலகவா, வேண்டாமா என ஜோதிபாசுவிடம் கேட்கவுள்ளார். விலகுங்கள் என்று ஜோதிபாசு அறிவுரை கூறினால் நாளையே தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என அவருக்கு நெருக்கடி எதுவும் தரப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இல்லை, சோம்நாத்துக்கு எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. அவர் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
--
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications