அமைச்சர் ராஜா மீது மேலும் ஒரு கடத்தல் புகார்
சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கடத்தி வைத்திருப்பதாக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது இன்று இன்னொரு ஆள் கடத்தல் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ராஜா 12 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைத்தறித்துறை அமைச்சர் ராஜா மீது ஆள் கடத்தல் புகார் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பழனிச்சாமியும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று ராஜா மீது மேலும் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சுப்ரமணியம் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
அதில் தனது சகோதரி கணவரான சுப்ரமணியம் என்பவரை அமைச்சர் ராஜாவின் அடியாட்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து 12 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஈரோடு எஸ்.பி, பெருந்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் ராஜா மீது அடுத்தடுத்து ஆள் கடத்தல் புகார்கள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications