இந்தியாவைப் போல பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது: யு.எஸ்
வாஷிங்டன்: இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தைப் போல பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள இயலாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியில் இந்தியாவின் பாதுகாப்பு அம்ச வரைவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து எதிர்ப்பை கைவிட்டுள்ளது.
இருப்பினும் அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியாவுடன் செய்து கொண்டுள்ளதைப் போன்ற அணு சக்தி ஒப்பந்தத்ைத பாகிஸ்தானுடனும், அமெரிக்கா செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கோர ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி பகிரங்கமாக கோரிக்ைக விடுத்திருந்தார்.
ஆனால், அப்படிப்பட்ட ஒப்பந்தம் சாத்தியமல்ல என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்திய - அணு சக்தி ஒப்பந்தம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரும், முன்னாள் அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறுகையில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் போன்ற ஒன்றை பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது.
இந்தியாவின் நம்பிக்கை, இந்தியா மீதான நம்பிக்கை, அதனிடம் உள்ள அதி நவீன பாதுகாப்பு வசதிகள், சிறப்பான கட்டமைப்பு, சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கண்காணிப்பு உள்ளிட்டவை சிறப்பாக உள்ளன. ஆனால் பாகிஸ்தானிடம் அப்படி இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டதைப் போன்ற ஒப்பந்தத்ைத பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது.
இந்திய -அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நல்லது. இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
விரைவில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார் பர்ன்ஸ்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications