நெல்லை-மூட்டை மூட்டையாக வெடி பொருள்!

Subscribe to Oneindia Tamil

Sankarankoil map
சங்கரன்கோயில்: நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே மூட்டை மூட்டையாக ஜெலட்டின், டெட்டனேட்டர்கள், டைம்பாம்களை வெடிக்கச் செய்யும் கருவிகள் உள்ளிட்ட வெடி மருந்துப் பொருட்கள் மற்றும் குண்டுகள் பிடிபட்டுள்ளன.

இது தொடர்பாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சங்கரன்கோயிலுக்கும் கடையநல்லூருக்கும் இடையே சேர்ந்தமரம்-வலசை கிராமத்தில் இந்த வெடிப் பொருட்கள் பிடிபட்டுள்ளன.

இங்குள்ள ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்த்து.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார் குறிப்பிட்ட ஒரு வீட்டைச் சோதனையிட்டனர். அங்கு உப்பு மூட்டைகளில் நிறைய வெடி குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் டைம்பாம்களை வெடிக்கச் செய்யும் மின் சாதனப் பொருட்கள் ஆகியவை துணிகளில் சுற்றி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் போலீசார். உடனே அவற்றைக் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக இந்திரகுமார் (53), மீனாட்சிபுரம் நீலன் (39), திருவட்டநல்லூர் திருமலைக்குமார் (53) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

மேலும் இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி தினகரன், சேர்ந்தமரம் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+