நீதிமன்ற எச்சரிக்கை: தமிழகத்துக்கு தலைக்குனிவு-சரத்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களை மதிக்காமல், நிர்வாகத்தை திறம்பட நடத்தாமல் தமிழக அரசு செயல்படுகிறது. அமைச்சர்களிடம் காவல்துறை கைகட்டி நிற்கிறது என்று பல்வேறு குற்றச்சட்டுகளை ஆகஸ்ட் 1ம் தேதி எங்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டிக் காட்டினேன்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிப்பு செய்திருப்பதை, பந்த் நடத்தியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதிலிருந்து, நீதித் துறையைக் கையாள்வதில் தமிழக அரசு செயலிழந்து நிற்கிறது என்ற உண்மையும் நாங்கள் கூறிய குற்றச்சாட்டில் உள்ள உண்மையும் புரிய வரும்.
'நீங்கள் நீதிமன்றத்துக்கே உத்தரவு பிறப்பீர்களா? இதேபோக்கு நீடித்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி செய்வோம்' என்று நீதிபதிகள் எச்சரித்திருப்பது தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
நீதித்துறையை அவமதித்த செயலின் மூலம் தமிழக அரசு ஜனநாயகத்தையே அவமதித்த குற்றத்தை செய்திருக்கிறது. நீதித்துறைக்கு கட்டுப்பட்டவர்கள் போலவும் அரசால் வேலைக்கு அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஏதோ கவனக் குறைவால் பதிலளிக்க தவறிவிட்டார்கள் என்பது போல அவர்களை பதவி நீக்கம் செய்திருப்பதும் தலைமைச் செயலர் மன்னிப்பு கேட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
இனிமேலாவது நீதி, நேர்மை, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படையில் ஆட்சி செய்ய முன்வர வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே நமது கலாசாரம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications