டெல்லியில் 5 பாக். தீவிரவாதிகள் ஊடுறுவல் - உஷார் நிலை

சுதந்திர தினம் நெருங்கி வருவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் பயங்கர குண்டுவெடிப்பு சதியுடன் டெல்லிக்குள் ஊடுறுவியிருப்பாதக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதியன்று டெல்லியில் பயங்கர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி நாசம் விளைவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
சாந்தினி செளக், சரோஜினி நகர், கரோல்பாக், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களை அவர்கள் குறி வைத்திருப்பதாக ெதரிகிறது. இதில் சாந்தினி செளக் அருகேதான் செங்கோட்டை உள்ளது. இங்குள்ள கோட்டை கொத்தளத்திலிருந்துதான் பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடுறுவியுள்ள ஐந்துதீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடுறுவியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்கள், பொருட்கள் குறித்து போலீஸாருக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமை ஹூஜி தாக்கலாம்
இதற்கிடையே, வங்கதேச தீவிரவாத அமைப்பான ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி (ஹூஜி) அமைப்பு அஸ்ஸாமில்தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த ஹூஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உல்ஃபா உள்ளிட்ட உள்ளூர் தீவிரவாத குழுக்களுடன் இணைந்து கார் குண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் மூலம் தாக்குதல் நடத்த ஹூஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அஸ்ஸாம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குவஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட நகரங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்ைக நடவடிக்கையாக இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழா அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மைதானங்கள் போலீஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications