நெல்லைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ்காரர் எழுதியதாக சந்தேகம்
நெல்லை: நெல்லை மாநகரில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது. போலீஸ்காரர் ஒருவரே இதை எழுதியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அப்துல் கபூர் உள்ளிட்ட தீவிரவாதிகளை சமீபத்தில் கைது செய்த போலீஸார், நெல்லை, சென்னை மாநகரைத் தகர்க்கும் சதித் திட்டத்தை முறியடித்தனர்.
இதையடுத்து இரு நகரங்களிலும் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில், நெல்லை மாநகரில் ஒரு போலீஸ் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் உள்ளனர். ஆனால் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிக்கும் செயல் அதிக அளவில் நடக்கிறது.
போலீஸார் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சங்கிலிப் பறிப்பு குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நெல்லை கலெக்டர் அலுவலகம், மேயர் பங்களா, துணை மேயர் பங்களா, வ.உ.சி மைதானம், பிரபல ஜவுளிக் கடைகளில் குண்டு வெடிக்கும்.
இப்படிக்கு பீர் முகம்மது, சமாதானபுரம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் ஆணையர் மஞ்சுநாதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்ைத எழுதியது போலீஸ்காரராக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications