நகை வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் கொள்ளை
திருச்சி: திருச்சியில், நகை வியாபாரிகளை மிரட்டி கத்தி முனையில் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது சகோதரர் முத்துக்குமார் ஆகிய இருவரும் நகை வியாபாரிகள். தங்க காசுகள் வாங்குவதற்காக ரூ.3 லட்சம் பணத்துடன் திருச்சி வந்தனர். அவர்களது நண்பர் மணி என்பவருக்காக எடமலைப்பட்டிபுதூரில் பணப் பையுடன் காத்திருந்தனர்.
அப்போது அங்கு ஜீப்பில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டி கத்தி முனையில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
சமீபத்தில்தான் பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நகைக் கடையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்த நிலையில் திருச்சியில் இதேபோன்ற ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications