'மாயமான' வாலிபர் ஹெராயின் வழக்கில் கைது
சென்னை: காணாமல் போனதாகக் கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்களில் ஒருவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் அலி, ரபீக், ஷாஜகான், முகம்மத். இந்த 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு திருமணத்துக்கு செல்வதாகக் கூறிச் சென்றனர். ஆனால், வீடு திரும்பாமல் மாயமாயினர்.
இந்நிலையில் ஜாபர் அலி தனது தந்தை சவுகத் அலிக்கு போன் செய்து தன்னையும் நண்பர்களையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளதாகவும், பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பீதியடைந்த பெற்றோர் போலீசில் புகார் தந்தனர். இவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
விசாரணையில், ஜாபர் அலி திருச்சி போலீசாரால் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த திருமுருகன், ஏழுகிணறை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரும் ஹெராயினுடன் பிடிபட்டுள்ளனர்.
மாயமான மற்ற 3 பேரும் எங்குள்ளனர் என்று தெரியவில்லை. அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாக ஜாபர் அலி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications