பாஜக: எச்.ராஜா மீது தீண்டாமை கொடுமை வழக்கு
காரைக்குடி: தமிழக பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா, திமுக நகராட்சித் தலைவர் உள்பட 33 பேர் மீது தீண்டாமை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செக்காலை சிவன் கோவில் ஊரணிக் கரையி்ல் இருந்த முனீஸ்வரன், விநாயகர் கோவில்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக கூறி கடந்த 21ம் தேதி நகராட்சி ஊழியர்கள் கோவில்களை அகற்றினர்.
இதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சனை தொடர்பாக பாஜக மாநிலத் துணை தலைவர் எச்.ராஜா தலைமையில் அவரது கட்சியினருக்கும் நகராட்சி தலைவர் முத்துதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்சனை பெரிதானதை அடுத்து போலீஸார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில், தீண்டாமைக் கொடுமை பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
இதையடுத்து நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக ராஜா உள்பட 30 பாஜகவினர் மீதும், பாஜக தலித் அணி மாவட்டத் தலைவர் சேகரை ஜாதியை கூறி திட்டியதாக நகராட்சித் தலைவர் முத்துதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதும் காரைக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்?












Click it and Unblock the Notifications