மதுரையிலும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு: பங்குகள் மூடல்
மதுரை: மதுரையில் பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பங்குகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் சில வாரங்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் தட்டுப்பாடு ஓரளவுக்கு சீரடைந்து வருகிறது. இந்நிலையில் மதுரையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 115 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு நாள்தோறும் 50,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒன்றரை லட்சம் லிட்டர் டீசலை பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தற்போது பெட்ரோலிய நிறுவனங்கள் தமது விநியோகத்தில் 20 முதல் 30 சதவிகிதம் வரை விநியாகத்தை குறைந்துள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல பெட்ரோல் பங்குகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்திடம் கேட்டபோது, எரிபொருள் விநியோகம் குறைந்துள்ளதால், பெட்ரோல் பங்குகள் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பெட்ரோலிய நிறுவனங்களிடம் விநியோகத்தை அதிகரிக்கும்படி கேட்டுள்ளோம் என்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications