கருணாநிதியின் கேபிள் யுத்தம்-பாஜக தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி கவலைப்படாமல் முதல்வர் கருணாநிதி, கேபிள் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கிறது. எனவே, உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு மத்திய அரசும் பொறுப்பு, அதை மத்திய அரசு தட்டிக் கழிக்க முடியாது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதை கவனிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதியோ கேபிள் டிவி யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறார்.

இந்தக் தவறுகளுக்கெல்லாம்மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி பற்றி பாஜக தேசியத் தலைமை முடிவு செய்யும்.

ஒரிஸ்ஸா கலவரம் பிரச்சனையில் மத்திய அரசு பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறது. பாதிக்கப்பட்ட இந்துக்களை விட பாதிக்கப்பட்ட கிறிஸ்துவர்களுக்கு அதிக நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார மேதை என்று சொல்லப்படும் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோதுதான் பணவீக்கம் உச்சத்தை தொட்டது. இப்போது அவர் பிரதமராக இருக்கும்போது பணவீக்கம் மீண்டும் உச்சத்துக்கு போய்விட்டது.

அவர் நிதியமைச்சராக இருந்தபோது பங்கு சந்தை சரிந்தது. தற்போது அவர் பிரதமராக இருக்கும்போது மீண்டும் சந்தை சரிந்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+