நியமன எம்எல்ஏ பதவி: அரவாணிகள் கோரிக்கை
நெல்லை: அரவாணிகளுக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என்று அரவாணிகள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவி பிரியா பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அரவாணிகளும் சமூக அரசியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாதர் சங்க தலைவி மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் திருநங்கை பிரியா பாபு பேசியதாவது:
சமூகத்தில் அரவாணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. 99 சதவீத அரவாணிகள் ஆண்களாக பிறக்கிறார்கள். அரசு எங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலிலும் அரவாணி என குறிப்பிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அரவாணிகளுக்கும் அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் எம்எல்ஏ பதவிகளையாவது நியமன அடிப்படையில் வழங்க வேண்டும். இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாங்கள் பாடுபடுகிறோம். எங்களை பாவம் என்ற கண்ணோடத்தில் அணுக வேண்டாம். எங்களை ஒதுக்காமல் இருந்தாலே போதும் என்றார்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications