குமரியில் கன மழை-கடல் சீற்றம், ஆறுகளில் வெள்ளம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மேலும் பலத்த சூறாவளிக் காற்றும் வீசுவதால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
கன மழையால் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பலத்த காற்று காரணமாக ராமன்துறை, தேங்காய்பட்டணம், புதுக்கடை ஆகிய இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால் இப் பகுதிகளில் கடலை ஒட்டிய சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் ராமன்துறையில் கல்லறைத் தோட்டத்திற்குள்ளும் வீடுகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
அதே போல மணக்குடி, கீழ மணக்குடி, சங்கிலிதுறை ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. 10 அடி கடல் அலைகள் எழுந்ததால் பீதி பரவியது.
குமரியில் இன்று காலை சூரிய உதயத்தை பார்க்க வந்தவர்கள் கடல் சீற்றத்தைக் கண்டு அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவளம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கடல் அலைகள் இழுத்து சென்றன. கடல் சீற்றத்தின் காரணமாக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பலத்த மழையால் தாமிரபரணி, வல்லியாறு, பழயாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆற்றுப் படுகைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழயாற்றில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications