இந்தியாவுக்கு அமெரிக்க ஹர்ப்பூன் ஏவுகணைகள்
Subscribe to Oneindia Tamil

அமெரி்க்காவில் சுற்றுப் பயணத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்சுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
170 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு 24 ஹர்ப்பூன் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கும்.
இந்திய விமானப் படையின் கடல் பகுதி தாக்குதல்களுக்கு இந்த ஏவுகணை மிக உதவியாக இருக்கும். செயற்கைக் கோள் உதவியுடன் இயங்கும் இந்த ஏவுகணைகள், போர்க் கப்பல்களை விமானங்கள் சில நூறு கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருந்தே தாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணைகளை விற்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அவசர நோட் அனுப்பியுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் ஏவுகணைகள் இந்தியா வந்து சேரும்.












Click it and Unblock the Notifications