போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பு.. கடலூர் எஸ்பி உள்பட 15 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி தமிழ்நாட்டில் காவல்துறையில் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையல் சிறப்பாக செயல்பட்ட எஸ்பிக்கள் உள்பட 15 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த பதக்கம் வென்ற 15 காவலர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, "போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்" 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

chief minsters medals

இதன் அடிப்படையில், முதலமைச்சர் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்:

1. விவேகானந்த சுக்லா ஐபிஎஸ் - காவல் கண்காணிப்பாளர் - கடலூர் மாவட்டம்.

2.ஜி. சந்தீஷ் ஐபிஎஸ் - காவல் கண்காணிப்பாளர் - ராமநாதபுரம் மாவட்டம்.

3.ஸ்ரீ. லட்சுமணன் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு - சென்னை

4.வை மனோஜ் குமார் - காவல் உதவி ஆணையாளர் - போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு - சென்னை பெருநகர காவல்

5. மோ கண்ணன் - காவல் ஆய்வாளர் - மத்திய நுண்ணறிவு பிரிவு - திருச்சி மண்டலம்

6. பொ.காமராஜ் - காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு - கோவை மண்டலம்

7.மு அருண் - காவல் உதவி ஆய்வாளர் - குரங்கனி காவல் நிலையம் - தேனி மாவட்டம்

8. கே ராஜ்குமார் - தலைமை காவலர் - குமுளி காவல் நிலையம் - தேனி மாவட்டம்

9. க.கார்த்திகேயன் - தலைமை காவலர் - வேட்டைகாரனிருப்பு காவல் நிலையம் - நாகப்பட்டினம்

10. அ.குத்புதீன் - தலைமை காவலர் - கோட்டைபட்டினம் காவல் நிலையம் - புதுக்கோட்டை மாவட்டம்

11. க ராமர் - சிறப்பு உதவி ஆய்வாளர் - நல்லூர் காவல் நிலையம் - திருப்பூர் மாநகரம்
12.மு ஐயப்பன் - தலைமை காவலர் - மதுவிலக்கு அமலாக்க பிரிவு - திருநெல்வேலி
13. ந. பிரேம்குமார் - தலைமை காவலர் - ஆர் 3 அசோக் நகர் காவல் நிலையம் - சென்னை பெருநகர காவல்
14. உ.பி. செந்தில் குமார் - சிறப்பு உதவி ஆய்வாளர் - மதுவிலக்கு அமலாக்க பிரிவு - கரூர் மாவட்டம்
15. ச.ராமகிருஷ்ணன் - தலைமை காவலர் - போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு - தேனி அலகு என மொத்தம் 15 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+