குண்டு வெடிப்பு கைதிகளுக்கு விடுதலை கோரி மறியல்
கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன்பு பெண்கள் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்த 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை சிறையில் ஆயுள் தண்டணை பெற்ற 296 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அல்-உம்மாவினர் உள்பட 68 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சிறை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க போலீஸார் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆர்டிஓ பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கை மனுவை தந்தால் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
இதையடுத்து அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பேரில் அவர்களை விடுவிடுக்க கோரி அவர்களது உறவினர்கள் எழுதிக் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு அரசுக்கு அணுப்பி வைப்பதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையறிந்த குண்டு வெடிப்பு கைதிகள், தங்களையும் விடுதலை செய்யக்கோரி பாஷா தலைமையில் சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை செய்வதில் பாரபட்சம் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சிறைக்குள் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications