வடிவேலு வீடு மீது தாக்குதல் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை: வீடு தாக்கப்பட்டது தொடர்பாக நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் வடிவேலுவுக்கும் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தாக்குதலைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்ற வடிவேலு அங்கு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், என் வீட்டின் மீதும், அலுவலகத்தின் மீதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் 30 பேர் என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் இரவு விசாரணை நடத்தினார். வடிவேலு வீடு உள்ள தெருவில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வியகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி, அத்துமீறி சட்டத்திற்குப் புறம்பாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
வடிவேலு வீட்டுக்குப் பாதுகாப்பு:
வடிவேலுவின் வீடு மற்றும் அலுவலகத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வடிவேலுவுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் வீட்டில் கூடிய தொண்டர்கள்:
இந்த நிலையில், அடுத்த தெருவில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நேற்று இரவு பெருமளவிலான தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications