ஆங்கிலத்தில் பள்ளி முத்திரை: அரசு உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம்
நெல்லை: தமிழில் உள்ள பள்ளி முத்திரையை (ரப்பர் ஸ்டாம்ப்) ஆங்கிலத்தில் உடனடியாக தயார் செய்ய வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகளுக்கு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது அரசு. இதற்கான காரணம் தெரிவிக்கப்படாததால் ஆசிரியர்கள் குழம்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தலைமையில் கடந்த 23ம் தேதி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு பறந்தது.
காலாண்டு விடுமுறை 23ம் தேதியில் இருந்து தொடங்கியுள்ள நிலையில் இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் பள்ளியில் எத்தனை கழிப்பறைகள் உள்ளன, மின்வசதி உள்ளதா போன்ற வழக்கமான கேள்விகளே இடம் பெற்றிருந்தன. மேலும் இதுவரை தமிழில் இருந்த பள்ளி முத்திரையை (ரப்பர் ஸ்டாம்ப்) ஆங்கிலத்தில் உடனடியாக தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற தகவல்களை மாதம் ஒருமுறை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சமர்ப்பிப்பது வழக்கம்.
இது குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் போத்திலங்கம், நெல்லை மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்துள்ளதாக கூறிக்கொள்ளும் அரசு பள்ளி முத்திரை கட்டாயம் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் காரணம் புரியவில்லை.
அதுவும் உடனடியாக தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் இரவோடு, இரவாக பள்ளி முத்திரையை ஆங்கிலத்தில் தயார் செய்து தலைமை ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர். அதற்கான காரணம் எதையும் அதிகாரிகள் கூறவில்லை.
தொடக்க கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி கடந்த 23ம் தேதி முதல் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தலைமை ஆசிரியர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்ல 22ம் தேதி மாலை கிளம்ப ஆயத்தமாக இருந்தார்கள்.
இந்நிலையில் அன்றைய தினம் இரவே தலைமை ஆசிரியர்களுககு உத்தரவு பறந்துள்ளது. ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கேட்டுள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications