வடிவேலு மீது நடவடிக்கை: விஜயகாந்த் மேலாளர் வழக்கு

நடிகர் விஜயகாந்த்திடம் மேலாளராக இருப்பவர் சதீஷ் குமார். கடந்த ஆண்டு வடிவேலு அலுவலகம் மீது தேமுதிகவினர் தாக்குதல் நடத்தியதாக வடிவேலு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சதீஷ்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் வடிவேலு வீடு மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் தரப்பில் வடிவேலுவுக்குப் பதிலடியாக உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. சதீஷ்குமார் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை வடிவேலு தாக்கினார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் இதுவரை அதன் மீது நடவடிக்ைக எடுக்கவில்லை.
நான் கொடுத்த புகாரை வரைந்து விசாரித்து நடவடிக்ைக எடுக்க விருகம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விரைந்து விசாரித்த முடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
விஜயகாந்த் தரப்பினரின் இந்த புதிய வழக்கால் வடிவேலு - விஜயகாந்த் விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications