குடி, கும்மாளம்: கவுன்சிலர்கள் மீது வழக்கு-அதிகாரிகள் சஸ்பெண்ட்
விழுப்புரம்: திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் மற்றும் சிலர் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறுகையில், திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் சிலர் மது அருந்திய விவகாரத்தில் முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கவுன்சில்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழு விசாரணைக்கு பின்புதான் அவர்கள் மீதான நடவடிக்கை குறி்த்து தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த புகாரின் பேரில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜானிபாட்ஷா, கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ரகோத்தமன், அண்ணாத்துரை, மற்றும் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் மணி, வினோபா உள்பட சிலர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மன்றத்தில் மது குடித்து கொச்சைபடுத்திய இவர்களது பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications