லாரி கவிழ்ந்து ரூ10 லட்சம் கண்ணாடி நாசம்
தென்காசி: லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. நெல்லை மாவட்டம் புளியரை எஸ் வளைவு வழியாக நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.
சாலை மிகவும் மோசமாக இருந்ததால் டிரைவர் சிரமப்பட்டு லாரியை ஓட்டினார். அப்போது நெல்லையில் இருந்து புனலூருக்கு சுண்ணாம்பு பவுடர் ஏற்றி சென்ற மினிலாரி பின்னால் வந்து கொண்டிருந்தது.
திடீரென்று நிலைதடுமாறிய கண்ணாடி லோடு லாரி மினிலாரி மீது கவிழ்ந்தது. இதில் இரண்டு லாரிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இதில், லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகள் முழுவதுமாக சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை. இந்த விபத்து காரணமாக இப் பாதையில் சுமார் 3 மணி நேரம் தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications