சென்னை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் துணிகர கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் மீனா குமாரி. இவரது வீடு விருகம்பாக்கத்தில் உள்ளது.
இன்று அதிகாலை வீட்டில் மீனாகுமாரியின் மகனும், மகளும் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியைக் காட்டி மீனாகுமாரியின் மகன், மகளை மிரட்டி வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே துப்பாக்கி முனையில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications