விஜயவாடா கோவிலில் ரூ. 1.11 லட்சத்திற்கு ஏலம் போன லட்டு

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீதுர்கை மல்லேஸ்வரா சாமிவர்லா தேவஸ்தானத்திற்கு விஜயவாடா ஹோட்டல் அதிபர்கள் சங்கம் அன்பளிப்பாக அளித்த 110 கிலோ எடை கொண்ட பிரமாண்ட லட்டு, ரூ.1.11 லட்சத்திற்கு ஏலம் போனது. கோவில் வளாகத்தில் நேற்று இந்த லட்டு ஏலம் நடைபெற்றது.

கோவில் உற்சவ கமிட்டி உறுப்பினர் வித்யாதர் இந்த லட்டை ஏலத்தில் எடுத்தார். அவர் 2வது ஆண்டாக லட்டை ஏலத்தில் எடுத்துள்ளார் எடுத்துள்ளார்.

ஏலம் மூலம் கிடைத்த தொகையை கோவிலின் வளர்ச்சிக்காக ஹோட்டல் அதிபர்கள் சங்கம் அளிக்கவுள்ளது.

கடந்த 6ம் தேதி இந்த லட்டு கோவிலுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அன்று முதல் இது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. முந்திரிப் பருப்புகள், பிஸ்தா ஆகியவற்றால் லட்டுஅலங்கரிக்கப்பட்டிருந்தது.

35 கிலோ நெய், 25 கிலோ உலர்ந்த பழங்கள், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சர்க்கரை உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த லட்டு தயாரிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+