ரூர்கேலாவில் குண்டுவெடிப்பு - 8 பேர் படுகாயம் - 2 பேருக்கு வலைவீச்சு
ரூர்கேலா: ரூர்கேலாவில் நேற்று அடையாளம் தெரியாத இரு நபர்கள் வீசி விட்டுச் சென்ற குண்டுவெடித்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று நவராத்திரி விழாவின் இறுதி நிகழ்ச்சியான துர்க்கை அம்மனை ஆஙற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜாமன்கேரா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியை முடித்த விட்டு ஏராளமானோர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பாலத்தின் மீது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த சாஹு என்பவர், யார் நீங்கள், கையில் உள்ள பையில் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் பதிலேதும் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தனர். பின்னர் வேகமாக கிளம்பினர். அப்போது பின்னால் உட்கார்ந்து சென்ற நபர் தான் வைத்திருந்த பையை கூட்டத்தினர் மீது வீசினார்.
அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் சாஹு உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
குண்டை வீசி விட்டுச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications