காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை-மேட்டூரிலிருந்து நீர் குறைப்பு
மேட்டூர்: தஞ்சை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வந்த நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
ஆனால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்ததாலும் திறந்துவிடப்படும் நீரின் அளவு 3 நாட்களுக்கு முன் வினாடிக்கு 18,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது பாசன பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.14 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக 6,000 கன அடி நீரும் கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications